ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ
ADDED : 121 days ago
இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் எவ்வளவு பிஸியாக படங்களுக்கு இசையமைத்தாலும் படங்களிலும் நேரம் ஒதுக்கி கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது அவரின் தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இரண்டு படங்களை ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஜோ பட இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் உருவாகும் விளையாட்டு தொடர்பான கதையில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக மாளவிகா மனோஜ் நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.
இதற்கு அடுத்த படமாக அடியே, ஹாட் ஸ்பாட் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு நடிகை வைஷ்ணவி சைதன்யா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.