விஜய் ரசிகர்களின் தெய்வீகமான அன்பு : பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி
ADDED : 106 days ago
நடிகை பிரியங்கா சோப்ரா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழி படங்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றவர். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரியங்கா சோப்ரா என்றால் அவர் 2002ம் ஆண்டில் மஜீத் இயக்கத்தில் விஜய் உடன் இணைந்து நடித்த 'தமிழன்' படம் தான் நினைவுக்கு வருகிறது.
சமீபத்தில் பிரியங்கா சோப்ரா அளித்த ஒரு பேட்டியில் தமிழன் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் தமிழன் படப்பிடிப்பின் போது விஜய்யை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தேன். விஜய் ரசிகர்கள் காட்டிய அன்பு ஒரு தெய்வீகமான உணர்வை போல இருந்தது. அப்போது தான் இந்திய ரசிகர்களின் அர்ப்பணிப்பை முதல்முறையாக நேரில் உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.