1000 கோடி நிகர வசூலைக் கடந்த 'துரந்தர் 2'
ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், மாதவன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் மார்ச் 19ம் தேதி வெளியான ஹிந்திப் படம் 'துரந்தர் தி ரிவெஞ்ச்'.
இப்படம் தற்போது இந்தியாவில் 1000 கோடி நிகர வசூலைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு இந்த சாதனையை தெலுங்குப் படங்களான 'பாகுபலி 2, புஷ்பா 2' ஆகிய படங்கள் பெற்றிருந்தது. இந்த சாதனையைப் படைத்துள்ள முதல் ஹிந்திப் படம் இது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
18 நாட்களில் இந்த சாதனையைப் புரிந்து, 'பாகுபலி 2, புஷ்பா 2' படத்தின் சாதனைகளையும் முறியடித்துள்ளது. மொத்தமாக தற்போது 1600 கோடி வசூலை இந்தப் படம் கடந்துள்ளது.
அடுத்து மொத்த வசூலில் இந்தப் படம் 'புஷ்பா 2' வசூலை முறியடித்து முன்னேறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் படங்களின் அதிக வசூல் படங்களில் 'டங்கல்' படம் 2000 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. அதையும் 'துரந்தர் 2' நெருங்குமா என்ற அடுத்த எதிர்பார்ப்பும் உள்ளது.