வாசகர்கள் கருத்துகள் (1)
கணவருடன் வீடியோ காலில் பேசினால் தூக்கிட்டுக் கொள்வாரா? வேறு ஏதோ பிரச்சினை. இதில் அவரின் கணவரை சிக்க வைக்க முயற்சி நடப்பதாகவே தோன்றுகிறது.
இலங்கையை சேர்ந்த சுபாஷினி, தமிழில் ஒளிபரப்பாகும் 'கயல்' எனும் சீரியலில் நடித்து வருகிறார். இவரது கணவர் பிப்பின் உடன் பெங்களூருவில் வசித்து வரும் சுபாஷினி, படப்பிடிப்புக்காக சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், நேற்று இரவு (ஏப்.,5) திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது கணவருடன் வீடியோ கால் பேசிய போது ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலை, சின்னத்திரை கலைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கணவருடன் வீடியோ காலில் பேசினால் தூக்கிட்டுக் கொள்வாரா? வேறு ஏதோ பிரச்சினை. இதில் அவரின் கணவரை சிக்க வைக்க முயற்சி நடப்பதாகவே தோன்றுகிறது.