ஜெயிலர் 2 படத்திற்கு 5 நாள் கால்சீட் தந்த ஷாருக்கான்
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் மலையாள நடிகர் மோகன்லால் தனக்கான காட்சிகளில் நடித்து முடித்துள்ளார். அவரை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் இப்படத்தில் இன்னொரு முக்கிய கெஸ்ட் ரோலில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஷாருக்கானும் ஐதராபாத்துக்கு வந்து தனக்கான காட்சிகளில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்காக ஷாருக்கான் ஐந்து நாள் கால்சீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயிலர் படத்தில் முதல் பக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமாரை தொடர்ந்து இந்த இரண்டாம் பாகத்தில் மிதுன் சக்கரவர்த்தி, ஷாருக்கான், விஜய் சேதுபதி என மேலும் பலர் நடிப்பது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.