உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கை நழுவிய பெரிய நடிகர் படம்... உதவிய நயன்தாரா... உருகிய விக்னேஷ் சிவன்

கை நழுவிய பெரிய நடிகர் படம்... உதவிய நயன்தாரா... உருகிய விக்னேஷ் சிவன்


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'எல்ஐகே' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் சென்னையில் நடந்தது. இதில் 4 ஹீரோயின்கள் கலந்துகொண்டனர். படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் கீர்த்தி ஷெட்டி; அவர் கலந்துகொண்டார். இன்னொரு ஹீரோயினாக நடிக்கும் கவுரி கிஷனும் வந்தார். இவர்களை தவிர, முக்கிய வேடத்தில் நடிக்கும் முன்னாள் ஹீரோயின் 'கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு' மாளவிகா, விக்னேஷ்சிவன் காதல் மனைவியும் ஹீரோயினுமான நயன்தாராவும் கலந்துகொண்டார். ஆனால் நயன்தாரா பேசவில்லை. அவரை பற்றி விக்னேஷ்சிவன் உருக்கமாக பேசினார்.

'சில நாட்களாக இந்த விழா ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார். நான் நினைத்த படத்தை எடுக்க முடியாத நிலை, நான் நினைத்த நடிகர்களை நடிக்க வைக்க முடியாத நிலை வந்தபோது அவர் உதவினார். நாங்கள் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த சென்றபோதுதான், அவர் 'மூக்குத்தி அம்மன் 2' படத்துக்காக வாங்கிய அட்வான்சை இந்த படத்துக்காக கொடுத்தார் என தெரிந்தது' என உருகினார். அப்போது மேடைக்கு நயன்தாராவும் வர, அவரை கட்டிணைத்து பாசத்தை வெளிப்படுத்தினார்.

'இந்த படத்தை நயன்தாரா தயாரித்தார் என கேட்கும்போது அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. எங்களை நல்லபடியாக பார்த்துக்கொண்டனர்' என கவுரிகிஷன் பேசினார்.

நடிகை மாளவிகா பேசுகையில், 'இந்த விழாவில் இயக்குனர் மிஷ்கினை நான் பார்க்கிறேன். எனக்கு 'வாளமீனுக்கும்' பாடலை கொடுத்தவர். இந்த படத்தில் கூட என் கேரக்டர் பெயர் வாளமீன் என்பதுதான். பாடல்கள் நன்றாக இருக்கிறது. படம் ஹிட்டாகும்' என்கிறார்.


மெயின் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி பேசுகையில், ''படத்தில் ரவிவர்மன் கேமரா வொர்க் நன்றாக இருக்கிறது. பல முன்னணி கலைஞர்களுடன் இதில் பணியாற்றி இருக்கிறேன். என்னை அழகாக காண்பித்து இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் இந்த படம் மறக்க முடியாதது. அனிருத் இசை ஹிட்டாகி உள்ளது. படம் பார்த்தவர்கள் என் கேரக்டரை பாராட்டினார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி. ஏப்ரல் 10 படம் வந்திருமா என்று பலர் கிண்டல் செய்தார்கள். நாங்கள் பெஸ்ட் படத்தை தருகிறோம். எங்கள் குழு உழைத்து இருக்கிறது' என்றார்.
அஜித் படம்
விக்னேஷ் சிவன் பேசுகையில், ''ஒரு மிகப்பெரிய திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படம் கடைசி நேரத்தில் என் கை நழுவி போனது. தாலி கட்டுவதற்கு முன் மாப்பிள்ளை எழுந்து சென்றுவிட்டால், அந்த மணப்பெண்ணுக்கு திருமணம் நடப்பது எவ்வளவு கஷ்டமோ, அதுபோல தான் அதற்கு பின் ஒருவரை நம்ப வைப்பது ரொம்ப கஷ்டம். என்னை ஒரு மொக்க பீஸாக பார்க்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொன்னார்கள்'' எனப் பேசினார். அதாவது, அஜித் உடன் ஒரு படத்தை இயக்க கமிட் ஆன நிலையில் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டது. இதனையே விக்னேஷ் சிவன் குறிப்பிட்டு இவ்வாறு பேசினார்.

இந்த விழாவில் நயன்தாரா பேசவில்லை. பெரும்பாலும் தனது பட விழாவுக்கு வராதவர், கணவர் இயக்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !