வாசகர்கள் கருத்துகள் (1)
ஏம்பா ரஜினி, நீ வளர்ந்த காலத்தில், இன்னும் இப்ப கூட உன் பின்னால் சுற்றும் இளைஞர்களை நீ ஏன் ஒன்றும் சொல்ல வில்லை. அப்போ உனக்கு இனித்ததா?
நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பை முடித்து அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் 173வது படத்தில் நடிக்க உள்ளார். அதனை முடித்ததும் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படம் நடிக்க உள்ளார். இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் தடுப்பது, நடிகர் விஜய் காரை பின்தொடர்ந்து இளைஞர்கள் சென்று விபத்தில் சிக்குவது, இளைஞர்களுக்கான அறிவுரை மற்றும் கமலுடன் இணைந்து நடிக்க உள்ள படத்தின் அப்டேட் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு ரஜினி அளித்த பதில்கள்: ''ஜனநாயகன் திரைப்படம் குறித்த கேள்விக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயப்பட்டால் அது உங்களுக்குதான் ஆபத்து. இளைஞர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். படிக்கும் நேரத்தை விட்டுவிட்டால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவர். தயவுசெய்து குடிப்பழக்கம், கஞ்சாவிற்கு இளைஞர்கள் அடிமையாகக்கூடாது, உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும். அப்படிப்பட்ட நண்பர்களை தூரமாக வையுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். நானும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்கும்'' என்றார்.
ஏம்பா ரஜினி, நீ வளர்ந்த காலத்தில், இன்னும் இப்ப கூட உன் பின்னால் சுற்றும் இளைஞர்களை நீ ஏன் ஒன்றும் சொல்ல வில்லை. அப்போ உனக்கு இனித்ததா?