உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'துரந்தர் 2' படத்தைப் பார்த்த பிரபாஸ்

'துரந்தர் 2' படத்தைப் பார்த்த பிரபாஸ்

ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க, ஆதித்யா தர் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 'துரந்தர் 2' படம் உலக முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தைப் பார்த்து ஹிந்தி சினிமா பிரபலங்களை விட தெலுங்கு சினிமா பிரபலங்கள்தான் அதிகமாகப் பாராட்டியிருக்கிறார்கள். பான் இந்தியா பிரபலமான, தெலுங்கு நடிகர் பிரபாஸ் நேற்று இந்தப் படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா உடன் பார்த்துள்ளார். அவர்கள் இருவரும் பார்த்த புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டு தினங்களுக்கு முந்தைய அறிவிப்பின்படி இப்படம் உலகம் முழுவதும் 1622 கோடிகளை வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 1228 கோடியும், வெளிநாடுகளில் 394 கோடிகளும் வசூலித்துள்ளது.

இந்த ஆண்டில் 1500 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படமாக இந்தப் படம் சாதனை புரிந்துள்ளது. தற்போதைய வசூல் நிலவரம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !