காக்கி சர்க்கஸ் : ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர்
தமிழில் வெப் தொடர்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 'காக்கி சர்க்கஸ்' என்ற காமெடி வெப் தொடர் ஒன்று ஜீ5 தளத்தில் நாளை வெளியாகிறது. பொதுவாக காமெடி போலீஸ் வெப் தொடர்கள் ஏராளமாக வந்துள்ளது. இந்த தொடரில் போலீஸ் சீரியசாக இருப்பார்கள், ஆனால் திருடன் காமெடியனாக இருப்பான். அதனால்தான் 'சீரியஸ் போலீஸ், சிரிப்பு திருடன் என்று' தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இதனை அமீர் பாரிப் என்பவர் இயக்கி உள்ளார். சுபாஷ் செல்வம், முனீஷ்காந்த், ராஜேஷ் மாதவன், கவுதமி, விஷ்ணு ரோச், சாவித்ரி, அமுருதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கிறார்.
ஒரு போலீஸ் ஸ்டேஷன் அருகில் போலீசாரே இணைந்து ஒரு கோவில் கட்டி உண்டியல் வைக்கிறார்கள். ஒரு நாள் அந்த உண்டியிலில் உள்ள காணிக்கையை யாரோ திருடி விடுகிறார்கள். இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதும் போலீசார் ரகசியமாக திருடனை தேடுகிறார்கள். திருடன் யார்? திருடப்பட்ட காணிக்கை திரும்ப கிடைத்ததா என்பதுதான் இந்த தொடரின் கதை.