இறுதி கட்டத்தில் 'மீசைய முறுக்கு 2'ம் பாகம்
ஹிப் ஆப் தமிழா ஆதி இயக்கிய 'மீசைய முறுக்கு' படம் 2017ம் ஆண்டு வெளியானது. இதனை சுந்தர்.சி தாரித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதன்பிறகு வெளிவந்த ஆதியின் படம் எதுவும் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அவர் மீசைய முறுக்கு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான் , 'ஆடுகளம்' நரேன், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார்.
கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருத்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. 'ஆரா பத்துக்கு ஆரா' என்ற முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது, தற்போது 'பப்பாளி பழமே' என்ற இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. இந்த கோடை விடுமுறையில் படத்தை வெளிட திட்டமிட்டிருக்கிறார்கள்.