உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ரஜினிக்கு மிஸ் ஆன 'தென்னங்கீற்று'

பிளாஷ்பேக் : ரஜினிக்கு மிஸ் ஆன 'தென்னங்கீற்று'

நடிகர் ரஜினியின் முதல் படம் 'அபூர்வ ராகங்கள்' என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே அவர் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி அந்த படம் டிராப் ஆகியுள்ளது.

அன்றைக்கிருந்த பிரபல எழுத்தாளர் கோவி.மணிசேகரன் நிறைய படங்கள் எடுத்து அவைகள் தோல்வி அடைந்ததால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அந்த காலகட்டத்தில்தான் ரஜினிகாந்த், சிவாஜி ராவாக சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிந்தார். அவரது நண்பர்களில் ஒருவரான கோபால், ரஜினியை கோவி மணிசேகரன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். “அண்ணே இவன் பெங்களூரு பையன் என் கூடதான் சினிமா இன்ஸ்ட்டியூட்ல படிச்சான். நல்லா நடிப்பான், ஸ்டைல் பண்ணுவான். இவனை வச்சி ஒரு படம் பண்ணுங்க சம்பளம் எதுவும் வேண்டாம். சாப்பாட்டுக்கும் ரூம் வாடகைக்கும் மட்டும் காசு கொடுத்தா போதும்” என்றார்.

ரஜினியும் சில காட்சிகளை நடித்து காட்டி சிகரெட் ஸ்டைல்களையும் செய்து காடடினார். அது கோவி.மணிசேகரனுக்கு பிடித்துவிட்டது. தம்பி நான் பணம் புரட்டிக் கொண்டிருக்கிறேன். படம் ஆரம்பிக்கும்போது தம்பிக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன் என்று அனுப்பி வைத்தார். பின்னர் 'தென்னங்கீற்று' என்ற படத்தை கோவி மணிசேகரன் ஆரம்பித்தபோது ரஜினியை தேடினார். அவர் அபூர்வ ராகங்களில் அறிமுகமாகி 7 புதிய படங்களில் கமிட்டாகி இருந்தார். இதனால் அவர் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதில் விஜயகுமார் நடித்து அந்த படம் வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !