பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ; ஒருவர் காயம்
பிரபல தெலுங்கு இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா பாலிவுட்டில் ரன்வீர் கபூரை வைத்து 'அனிமல்' என்கிற ஆயிரம் கோடி வசூல் படத்தை கொடுத்த கையோடு மீண்டும் தெலுங்கிற்கு திரும்பி வந்து தற்போது பிரபாஸ் நடித்து வரும் 'ஸ்பிரிட்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி நடிக்க, நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்ட செட்டில் தீ விபத்து ஏற்பட்டு பாதி அளவுக்கு சேதம் அடைந்ததாக ஒரு தகவல் வெளியானது. இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் பிரபாஸ் படப்பிடிப்பு தளத்தில் இல்லை என்றும் இந்த தீ விபத்தில் படக்குழுவினரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதேசமயம் இது குறித்த தகவலை இன்னும் ஸ்பிரிட் பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.