ஆடுகளத்திலிருந்து வெளியேறுகிறார் டெல்னா டேவிஸ்
முன்னணி சேனலில் ஒளிப்பாகி வரும் 'ஆடுகளம்' தொடர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபகாலமாக இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடவை சந்தித்ததால் மாலையில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரின் ஸ்லாட் மதிய நேரத்திற்கு ஒதுக்கப்பட்டது.
இந்த தொடரில் டெல்னா டேவிஸ், காயத்ரி ரகுராம், சச்சு, காத்தாடி ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் சத்யா என்ற கேரக்டரில் நடித்து வந்த டெல்னா டேவிஸ் தொடரில் இருந்து விலகுகிறார். இதற்கான கடிதத்தை அவர் தயாரிப்பு தரப்பு மற்றும் சேனல் தரப்பிடம் கொடுத்து விட்டடதாக கூறப்படுகிறது. ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக டெல்னா விலகுவதாக கூறப்படுகிறது. இன்னும் பலர் விலக கூடும் என்கிறார்கள். டெல்னாவிற்கு பதில் புதிய நடிகையை தேர்வு செய்யும் வரை தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று தயாரிப்பு தரப்பு கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அதற்கு டெல்னா சம்மதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.