ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த்
வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கையால் முடங்கியது.
தேர்தல் முடிந்ததும் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்பே மொத்த படமும் இணையதளங்களில் வெளியாகி படக்குழுவிற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கே அதிர்ச்சியை தந்துள்ளது. இதற்கு சினிமாவிலிருந்து முதல் ஆளாய் நடிகர் சிவகார்த்திகேயன் குரல் கொடுத்துள்ளார். தொடர்ந்து சிரஞ்சீவி , சூர்யா, விஷால், குஷ்பூ, தயாரிப்பாளர்கள் சங்கம் என பலரும் பைரசிக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். படத்தை தயாரித்துள்ள கேவிஎன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் யாரும் பைரசி வீடியோவை பதிவிறக்கம் செய்யாதீர்கள், பகிரவும் செய்யாதீர்கள், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.