வாசகர்கள் கருத்துகள் (1)
ஆழ்ந்த இரங்கல் .. ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ...
பிரபல திரைப்பட பின்னணி பாடகியான மறைந்த லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போஸ்லே, திரைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி திரைப்படங்களில் சுமார் 12 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் ஆஷா போஸ்லேவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ஆஷா போஸ்லே 92 வயதில் காலமானார். இவர் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் மனைவி ஆவார். தாதா சாகேப் பால்கே, பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். ஆஷா போஸ்லேவின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆழ்ந்த இரங்கல் .. ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ...