'டிராகன்' படத்திற்காக உடலை மெருகேற்றிய ஜூனியர் என்டிஆர்
ADDED : 1 days ago
தெலுங்கு முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர், அடுத்து நடிக்கும் படம் 'டிராகன்'. பிரசாந்த் நீல் இயக்கும் இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.
இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக வெளிநாட்டு சண்டை கலைஞர்களும் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சண்டை காட்சிகளின் நம்பகத்தன்மைக்காக ஜூனியர் என்டிஆர் தனது உடலை மெருகேற்றி இருக்கிறார். அதோடு சிக்ஸ் பேக்கும் வைத்துள்ளார்.
20 நாளில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறியிருக்கிறார் ஜூனியர் என்டிஆர். இந்த புகைப்படங்களை அவர் தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் தற்போது அது வைரலாகியுள்ளது. இதற்கு முன்பு ராம்சரண் 'பெத்தி' படத்திற்காக சிக்ஸ் பேக் உடலுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.