உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாளத்தில் யுவன் ஷங்கர் ராஜா

மலையாளத்தில் யுவன் ஷங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்போது முதன்முறையாக மலையாளத்தில் கால்பதிக்கிறார். மலையாள நடிகரான ஜோஜூ ஜார்ஜ், ‛பனி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு வெற்றியை தந்தது.

அடுத்து இவர் ‛பரிபாடி' என்ற படத்தை இயக்குகிறார். இது பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட்டாகி உள்ளார். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவ் ஸ்டன்ட் அமைக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.

யுவன் சினிமாவில் அறிமுகமாகி 29 ஆண்டுகளில் முதன்முறையாக மலையாள படத்திற்கு இப்போது தான் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !