'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம்
நடிகர் தனுஷ் தற்போது 'போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ், ஜெயராம், சுராஜ் வெஞ்ஜரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருவதையொட்டி கர படத்திற்காக விக்னேஷ் ராஜா தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார். ஒரு பேட்டியில் விக்னேஷ் ராஜா கூறியதாவது, கர படத்தில் சுராஜ் வெஞ்ஜரமூடு கதாபாத்திரத்திற்கு முதலில் பிரித்விராஜை நடிக்க அணுகி கதை மற்றும் கதாபாத்திரம் குறித்து கூறினேன். இப்படம் வெற்றி பெறும் ஆனாலும், அவரை அந்த கதாபாத்திரம் ஈர்க்கவில்லை என்றார். அதன் பின்னர் இந்த கதாபாத்திரத்தை சீர்படுத்தி எழுதி இன்னும் 4,5 நடிகர்களை அணுகினேன். கடைசியாக தான் இந்த கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்ஜரமூடு நடிக்க உறுதி செய்தார். இவ்வாறு தெரிவித்திருந்தார்.