2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்'
ADDED : 4 hours ago
'கேஜிஎப், காந்தாரா' உள்ளிட்ட படங்களை தயாரித்த கன்னட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் 2025ல் 'மகா அவதார் நரசிம்மா' என்ற அனிமேஷன் படங்களை தயாரித்தது. அஸ்வின் குமார் இயக்கியிருந்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டாலும் அனிமேஷன் காட்சிகள் உலகத் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி அடுத்ததாக 'மகா அவதார் பரசுராம்' எனும் படத்தை உருவாக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கும் சாம் சி எஸ் இசையமைக்க உள்ளார். அடுத்தாண்டு டிசம்பரில் படத்தை வெளியிட உள்ளனர்.