உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட்

கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட்

காமெடி நடிகராக, குணசித்திர நடிகராக நடித்து வரும் காளி வெங்கட் அவ்வப்போது கதை நாயகனாகவும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அப்படி அவர் நடித்த ஹவுஸ்மேட் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது விஜய் கார்த்திகேயன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார்.

1995ல் நடக்கும் இந்த கதையில், அரசு பள்ளியில் படிக்கும் தனது மகனை தனியார் பள்ளியில் சேர்க்க போராடும் பாசக்கார தந்தையாக நடிக்கிறார். பல டிவி சீரியல்களில் நடித்த ரேஷ்மா முரளிதரன் ஹீரோயின். அப்பா, மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் சென்னை, சிவகங்கையில் படமாக்கப்பட உள்ளது. ஜென்சன் திவாகர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

படம் குறித்து பேசியுள்ள காளி வெங்கட், ‛படத்தில் நான் ஹீரோ அல்ல, கதையும், அந்த சிறுவனும் தான் ஹீரோ' என்கிறார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !