உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேர்தலுக்கு மறுநாள் ரிலீஸ்: அதிகரிக்கும் படப்பட்டியல்

தேர்தலுக்கு மறுநாள் ரிலீஸ்: அதிகரிக்கும் படப்பட்டியல்

தமிழக சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமை புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். இந்தமுறை தேர்தலுக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை வருவதால் கூட்டம் வராது, தேர்தல் களைப்பு, பணிச்சுவை போன்ற விஷயங்களால் யாரும் படம் பார்க்க வரமாட்டார்கள் என்ற கருத்து நிலவியதால் பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

ஆனாலும், சூழ்நிலை காரணமாக காந்தி கிருஷ்ணா இயக்கிய 'பிரேக்பாஸ்ட்', புதுமுகங்கள் நடித்த 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி' படங்கள் ஏப்ரல் 24ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. அடுத்து அஜித் நடித்த 'அமர்களம்' அன்றைய தேதி ரீ ரிலீஸ் ஆகிறது.

விஜய் நடித்த 'சிவகாசி' ரீ ரிலீசும், மாதவன் நடித்த 'ரன்' ரீ ரிலீசும் இந்த தேதியில் இணைந்துள்ளன. இந்த படங்கள் தவிர 'பேட்டில், பாவக்கூத்து, தீயோர்கூடம்' ஆகிய படங்களும் ஏப்ரல் 24ல் வெளியாக உள்ளது. எம்ஜிஆரின் 'மாட்டுக்காரவேலன்' (ரீ ரிலீஸ்) ஏப்.23ல் வெளியாகிறது. மொத்தத்தில் இந்த வார ரிலீஸ் படங்களின் எண்ணிக்கை ஒன்பதாகிவிட்டது. இதில் எத்தனை படங்கள் வெற்றி பெற போகிறதோ? அடுத்த வாரம் தனுஷ் நடித்த 'கர' வருவதால் தியேட்டர் கிடைக்காது என்ற காரணத்தால் இந்த படங்கள் இந்த வாரமே வருவதாக தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !