உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சாதனை படைக்கும் துரந்தர் 2

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சாதனை படைக்கும் துரந்தர் 2

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் 19ம் தேதி திரைக்கு வந்த படம் துரந்தர் 2. இப்படம் உலக அளவில் 1,800 கோடி வசூலை நெருங்கி இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில் தற்போது பல உலக நாடுகளில் வெளியான இந்திய படங்களின் வசூல் சாதனையை அடுத்தடுத்து இப்படம் முறியடித்து வருவதாக படக்குழு ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறது. அதில், ஷாருக்கானின் பதான் படம் இங்கிலாந்தில் அதிக வசூல் செய்த இந்திய படமாக முதலிடம் பிடித்திருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை துரந்தர் 2 முறியடித்துள்ளது. அதோடு, ஆஸ்திரேலியாவில் இந்த படம் 8.255 மில்லியன் டாலர்களை வசூலித்து இருக்கிறது. இது அந்நாட்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் ஆகும். அதேபோல், நியூசிலாந்தில் 1.295 பில்லியன் நியூசிலாந்து டாலரை இந்த படம் வசூலித்திருக்கிறது. அந்த வகையில் அங்கு பதான் படத்தை விட அதிகப்படியாக வசூலித்து முதலிடம் பிடித்திருக்கிறது துரந்தர்-2.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !