ஷாருக்கானின் ஜவான் 2 எப்போது?
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். அனிருத் இசையமைத்த இந்த படம் 300 கோடியில் தயாரிக்கப்பட்டு 1,048 கோடி வசூலித்தது.
ஜவான் படத்தை அடுத்து தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் ராக்கா என்ற படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படத்தில் ஷாருக்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த ராக்கா படத்தை இயக்கி முடித்ததும் மீண்டும் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் 2 படத்தை இயக்கப் போகிறார் அட்லி.
தற்போது ஹிந்தியில் சித்தார்த் ஆனந்த் இயக்கும் கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். இந்த படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து அட்லி இயக்கத்தில் மீண்டும் அவர் நடிக்கும் ஜவான்-2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்க இருப்பதாக பாலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.