உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / '3 இடியட்ஸ்' இரண்டாம் பாகம்: உறுதி செய்த அமீர்கான்

'3 இடியட்ஸ்' இரண்டாம் பாகம்: உறுதி செய்த அமீர்கான்


கடந்த 2009ம் ஆண்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான், மாதவன், ஷர்மன் ஜோஷி, கரீனா கபூர் நடிப்பில் உருவான படம் '3 இடியட்ஸ்'. இப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில், தமிழில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதுவும் ஹிட்டானது. இதில் '3 இடியட்ஸ்' திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகுமா என படம் வெளியான நாளில் இருந்து எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

இது தொடர்பாக ஒரு நேர்காணலில் பங்கேற்ற அமீர்கானிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அமீர்கான் கூறியதாவது: தற்போது '3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். கதையை நான் கேட்டேன், நல்லபடியாக வந்துள்ளது. ஆனாலும் கதையை இறுதி செய்ய இன்னும் பல வேளைகள் இருக்கின்றன. அதே நகைச்சுவை பாணி இருந்தாலும், இதுவரை சொல்லப்படாத கதையாக இது இருக்கும். இப்படமும் 3 இடியட்ஸ் கதையாக இருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு பிறகான கதைக்களத்தை கொண்டுள்ளது. அபிஜத் மற்றும் ராஜு ஆகியோர் இந்த கதையை நன்றாக எழுதியுள்ளனர். நானும் இந்த படத்திற்காக காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

இதன்மூலம் '3 இடியட்ஸ்' திரைப்படத்தின் 2ம் பாகத்தின் பணிகள் விரைவில் முழுமைப்பெற்று, படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்கள் நடிப்பார்களா அல்லது அமீர்கானை வைத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு மற்றுமொரு கல்லூரி மாணவர்களின் கதைக்களமாக இருக்குமா என்பது இனிதான் தெரியவரும். மேலும், இதன் தமிழ் ரீமேக்கான 'நண்பன்' படத்தில் நடித்த விஜய், தற்போது அரசியலுக்கு சென்றதால் மீண்டும் படம் நடிப்பாரா, அதுவும் 'நண்பன் 2' படத்தில் நடிப்பாரா என்பது சந்தேகமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !