உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'லவ் ஓ லவ்' படத்தை சொன்ன பட்ஜெட்டில் சொன்ன நாட்களில் முடித்த அறிமுக இயக்குனர்

'லவ் ஓ லவ்' படத்தை சொன்ன பட்ஜெட்டில் சொன்ன நாட்களில் முடித்த அறிமுக இயக்குனர்


நடிகர் தனுஷின் சகோதரி மகன் பவிஷ், தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் கதாநாயகனாக அறிமுகாமானார். இதனை தொடர்ந்து அவர் தற்போது அறிமுக இயக்குனரான மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் ஓ லவ் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்த படத்தை தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

அறிமுக இயக்குனர் என்றாலும் தயாரிப்பாளரிடம் சொன்னபடி 42 நாட்களிலேயே சொன்ன பட்ஜெட்டிலேயே திட்டமிட்டபடி படத்தை முடித்து கொடுத்திருக்கிறார் மகேஷ் ராஜேந்திரன். தெளிவான திட்டமிடுதலுடன் படத்தை இயக்கியுள்ள இவர் நிச்சயமாக தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிப்பார் என்று படக்குழுவினர் பாராட்டுகிறார்கள். இவர் ரவி மோகன் நடித்த 'போகன்' படத்தின் இயக்குனர் ஆன லக்ஷ்மனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !