சினிமா டூ அரசியல் : அதிக வாக்கு சதவீதத்தில் விஜய்
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் முழுவதுமாக அறிவிக்கப்பட்டுவிட்டன. முதல் முறையாக சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் 34.9 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
தென்னிந்திய சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்று போட்டியிட்ட முன்னணி நடிகர்களில் அதிக சதவீத வாக்குகளைப் பெற்றவராக இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார் விஜய்.
முதலிடத்தில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட என்டிஆர் 46.3 சதவீத வாக்குகளுடன் முதலிட சாதனையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
எம்ஜிஆர் 30.4 சதவீதம், சிரஞ்சீவி 16.3 சதவீதம், விஜயகாந்த் 8.4 சதவீதம், பவன் கல்யாண் 5.5 சதவீதம், கமல்ஹாசன் 2.5 சதவீதம் பெற்று அதற்கடுத்து வரிசை நிலையில் இருக்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பு வரை விஜய் மட்டுமே வெற்றி பெறுவார், அவரது கட்சி 20 சதவீத வாக்குகள் பெறலாம் என்ற விதத்தில் சில கருத்துக் கணிப்புகள் நிலவியது. அவையனைத்தையும் பொய்யாக்கி தமிழக அரசியல் களத்தில் எம்ஜிஆர் புரிந்த சாதனையையும் முறியடித்து தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் விஜய்.