ஓடிடியில் வெளியானது 'கேரளா ஸ்டோரி 2'
வேலைவாய்ப்பு தருவதாக அரபு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் இளம் பெண்கள் தீவிரவாதிகளாக அங்கு மாற்றப்படுகிறார்கள் என்ற கதையுடன் வெளிவந்த 'கேரளா ஸ்டோரி' படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் படம் வெளியிடப்படவில்லை. சில மாநிலங்கள் படத்திற்கு வரிவிலக்கு கொடுத்தது.
இந்த நிலையில் அடுத்து 'கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்' என்ற படம் வெளியானது. இதில் இந்து பெண்களை காதல் என்ற போர்வையில் மயக்கி திருமணம் செய்து முஸ்லிமாக மாற்றுவது பற்றிய கதையாக உருவானது. முந்தைய படம் கேரளாவை மையப்படுத்தி இருந்தது. இந்த படம் ராஜஸ்தானை மையப்படுத்தி இருந்தது. இந்த படத்திற்கும் கடும் எதிர்ப்பு இருந்தது. வழக்குகள் தொடரப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் படம் தியேட்டர்களில் வெளியானது.
இந்த நிலையில் பெரிய போராட்டத்திற்கு பிறகு தற்போது ஜி5 ஓடிடி தளத்தில் ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்தப் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய மாநிலங்களில், அந்தந்த மொழிகளிலேயே படம் வெளியாகி இருப்பதால் படத்தை பார்க்க விரும்பியவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.