உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் சங்க புதுக் கட்டடம் : புதிய அரசு உதவி கிடைக்குமா?

நடிகர் சங்க புதுக் கட்டடம் : புதிய அரசு உதவி கிடைக்குமா?

தமிழக சட்டசபை தேர்தலில் பல சினிமா பிரபலங்கள் போட்டியிட்டனர். அதில் நடிகர்கள் சங்க உறுப்பினர்களான விஜய், உதயநிதி, பார்த்திப ராஜா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு நடிகர் சங்க பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து நடிகர் சங்க வெளியிட்ட அறிக்கையில், ‛‛மூவரையும் நினைத்து தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறது. நிறைவடைந்து வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்காக தக்க சமயத்தில் விஜய், உதயநிதி ஆகியோர் கணிசமான நிதி வழங்கி உதவியதை இச்சமயத்திலும், என்றும் நினைவுகூற கடமைப்பட்டுள்ளோம்'' என தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க புதுக்கட்டடத்தை கடந்த ஆட்சியில் ஸ்டாலின், உதயநிதி தலைமையில் திறக்க வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் முயற்சித்தனர். அது நடக்கவில்லை. நடிகர் சங்கத்தின் ஒரு பகுதிக்கு முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரை வைக்கலாம் என யோசிக்கப்பட்டது. வருங்காலத்தில் அது நடக்குமா என தெரியவில்லை.

தவெக தலைவர் விஜயும், விஷாலும் நல்ல நண்பர்கள். சென்னையில் லயோலா கல்லுாரியில் படித்தவர்கள். அதனால், விரைவில் நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட வாய்ப்பு. அதற்கு அரசு உதவிகள் அதிகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் இந்த தேர்தல் நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் திமுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். துணைத் தலைவர் கருணாஸ் திமுக கூட்டணியில் நின்று தோல்வியை தழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !