உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மே 7ல் முதல்வராக பதவியேற்கிறார் விஜய்: மனைவி, குழந்தைகள் 'ஆப்சென்ட்'

மே 7ல் முதல்வராக பதவியேற்கிறார் விஜய்: மனைவி, குழந்தைகள் 'ஆப்சென்ட்'

நேற்று வெளியான தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களை கைப்பற்றி சாதித்துள்ளது. பெரும்பான்மை இடங்கள் இல்லையென்றாலும், அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரியுள்ளார் விஜய். மேலும், தவெக சட்டசபை குழுத் தலைவராகவும் விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, தமிழகத்தின் அடுத்த முதல்வராக விஜய் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. நாளை மறுநாள் (மே 7) விஜய் முதல்வராக பதவியேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சில அமைச்சர்களும் அன்றைய தினமே பதவியேற்க உள்ளனர். இதற்கான பட்டியலை தயார் செய்யும் பணிகளில் தவெக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதவியேற்பு விழாவில் விஜயின் பெற்றோர் இயக்குனர் சந்திரசேகர் - ஷோபா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். விஜயின் மனைவி சங்கீதா, மகளின் படிப்பிற்காக லண்டனில் இருப்பதால் அவர் விழாவிற்கு வரவில்லையாம், அதேபோல் மகன் ஜேசன் சஞ்சய், தான் இயக்கிய 'சிக்மா' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருப்பதால் அவரும் கலந்து கொள்ளமாட்டார் என்கிறார்கள். சமீபத்தில் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவர்கள் விழாவை புறக்கணிக்க அதுவும் ஒரு காரணம் என்கின்றனர். ஆனால் விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !