உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐரோப்பா டூ ஆப்ரிக்கா: 15 கிலோமீட்டர் நீந்தி சாதனை செய்த நடிகர் மிலிந்த் சோமன்

ஐரோப்பா டூ ஆப்ரிக்கா: 15 கிலோமீட்டர் நீந்தி சாதனை செய்த நடிகர் மிலிந்த் சோமன்


பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், தமிழில் 'பையா' படத்தில் வில்லனாக நடித்தவர். சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'முத்து என்கிற காட்டான்' வெப் சீரிஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எப்போதுமே உடற்பயிற்சி செய்வதிலும், உடலைக் கட்டுமஸ்தாக வைத்துக்கொள்வதிலும் அக்கறை செலுத்தி வரும் மிலிந்த் சோமன், தற்போது ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு 15 கிலோமீட்டர் நீந்தி சாதனை செய்துள்ளார்.

ஐரோப்பாவை சேர்ந்த ஸ்பெயினின் 'தாரிப்பா' பகுதியிலிருந்து, ஆப்ரிக்காவில் உள்ள 'மொராக்கோ' கடற்கரை வரைவிலான ஜிப்ரால்டர் நீர்ச்சந்தியில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தை மிலிந்த் சோமன் நீந்திக் கடந்துள்ளார். இது ஒரு அழகான நீச்சல் அனுபவம் என்று இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !