ஸ்டாலினுக்கு ஆறுதல் சொல்லி பதிவு போட்ட நடிகை ரூபா மஞ்சரி
தமிழக சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய், வாக்கு எண்ணிக்கையில் முன்னணி பெற ஆரம்பித்ததுமே அவருக்கு பல சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள என பலரும் வாழ்த்துகளைத் பதிவு செய்தனர். அவர் ஆட்சியில் அமர்வாரா இல்லையா என்பது முடிவாகாத நிலையிலும் பலரும் வாழ்த்து மழை பொழிந்தனர்.
அதே வேளையில் தோல்வியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த திமுகவிற்கும் அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் யாரும் ஆறுதல் பதிவு போடவில்லை. ஆனாலும், நடிகை ரூபா மஞ்சரி அப்போதே ஒரு பதிவு போட்டிருக்கிறார். அது பலருக்கும் தெரியாமலேயே போய் இருக்கிறது.
“தாங்கள் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த முதலமைச்சராக மட்டுமல்லாமல், இந்நாடு இதுவரை கண்டிராத—பெற்றிராத—மிகவும் திறமையான மற்றும் அசாதாரணமான ஒரு முதலமைச்சராகவும் திகழ்ந்தீர்கள்! கடந்த ஐந்து ஆண்டுகளில் தாங்கள் நிகழ்த்திய சாதனைகள் வரலாற்றைப் படைத்தது மட்டுமல்லாமல், வேறு எவராலும் எட்டிப்பிடிக்க முடியாத மிக உயர்ந்த ஒரு தரநிலையையும் நிர்ணயித்துள்ளன. இது எங்களுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
“திரு திரு துறு துறு' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரூபா மஞ்சரி. 'நான், யாமிருக்க பயமே, சிவப்பு' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அதர்வா நடிக்கும் 'வலை' படத்தில் நடித்து வருகிறார்.