உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்'

மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்'

உலகின் நம்பர் ஒன் வெப் சீரீஸ் 'மணி ஹெய்ஸ்ட்'. 5 சீசன்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு புரபசர் தலைமையிலான குழு அரசாங்கத்திற்கே சவால்விட்டு வங்கியில் இருந்து பணத்தையும், தங்கத்தையும் கொள்ளை அடிக்கிற கதை. 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் முக்கிய கதாபாத்திரமான 'பெர்லின்' வாழ்க்கையை மையமாக வைத்து தொடர் வெளியானது. இதன் 2வது சீசன் வருகிற 15ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இனிமேல் 'மணி ஹெய்ஸ்ட்' சீசன் தொடராது என்று அறிவித்த நெட்பிளிக்ஸ் தற்போது அதன் அடுத்த சீசன் வரவிருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் புதிய சீசனின் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனவே அடுத்த சீசன் தயாராகிவிட்டதாக தெரிகிறது. இந்த சீசனில் தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை கொள்ளை அடிக்கும் கதை பின்னணியில் இது உருவாகிறது. தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது, தங்க கடத்தல், ஒவ்வொரு நாடும் வைத்திருக்கும் தங்கம் இதன் பின்னணயில் இந்த தொடர் உருவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !