உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு

மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை அடுத்து கருப்பு, ஜெயிலர் 2, அன் ஆர்டினரி மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. தெலுங்கில் ஏற்கனவே சவுண்ட் வார்னிங், குர்ரம் பாபி ரெட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள யோகி பாபு, தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ராக்கா படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கில் ரங்கபலி என்ற படத்தை இயக்கிய பவன் பசம் ஷெட்டி என்பவர் இயக்கும் புதிய படத்திலும் கமிட்டாகி உள்ளார் யோகி பாபு. தெலுங்கு சினிமாவின் தற்போதைய முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவரான சத்யாவுடன் இணைந்து யோகி பாபு நடிக்கும் இப்படம் காமெடி கதையில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !