உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு?

ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு?

ஹிந்தியில் சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ஏக் தின். நடிகர் அமீர்கான் தயாரித்த இந்த படத்தில் அவரது மகன் ஜுனைத்கான் நாயகனாக நடித்தார். சாய் பல்லவி நாயகியாக நடித்திருந்த இந்த படம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்த படத்திற்கு பிறகு ராமாயணா படத்தின் முதல் பாகத்தில் நடித்த சாய் பல்லவி தற்போது இரண்டாம் பாகத்திலும் தொடருகிறார். இதில் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் ராமராக நடிக்க, சீதை வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படம் 4000 கோடி பட்ஜெட்டில் இரு பாகங்களாக தயாராகி வருகிறது. இதுவரை இந்தியாவில் இவ்வளவு பட்ஜெட்டில் எந்த ஒரு படமும் தயாரானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராமாயணா படத்தின் இரு பாகங்களிலும் நடிப்பதற்கு சாய் பல்லவி 12 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !