உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அறம்' தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக நடித்த 'அங்கீகாரம்' டிரைலர் வெளியீடு

'அறம்' தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக நடித்த 'அங்கீகாரம்' டிரைலர் வெளியீடு


ஒரு காலத்தில் பிரபுதேவா நண்பராக, அவரின் கணக்கு வழக்குகளை பார்ப்பவராக இருந்தவர் கே.ஜே.ஆர் என்ற அழைக்கப்பட்ட கோட்டப்பாடி ஆர் ராஜேஷ். அடுத்து நயன்தாராவுக்கும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இருவரும் பிரிய, சினிமாதுறைக்கு வந்து படங்களை தயாரித்தார். குறிப்பாக, நயன்தாராவை வைத்து இவர் தயாரித்த 'அறம்' படம் பெரிய ஹிட்டானது. அடுத்து 'குலேபகாவலி, ஐரா, கா' படங்களை தயாரித்தார். சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' மற்றும் விஜய்சேதுபதியின் 'க.பெ.ரணசிங்கம்' படங்களையும் தயாரித்தார்.

இந்த படங்களில் பல படங்கள் பெரிய அடியை கொடுத்தன. குறிப்பாக, அயலான் படம் பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பல கோடி செலவழித்து போட்டியிட்டார். அதிலும் வெற்றி பெறவில்லை. சில ஆண்டுகளாக அவர் படத்தயாரிப்பில் இருந்து விலகி இருந்தார். இப்போது 'அங்கீகாரம்' என்ற படத்தை தயாரித்து, அவரே கதைநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.

ஸ்போர்ட்ஸ் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. ஒரு துாய்மை பணியாளர் மகன் எப்படி தடகளத்துறையில் சாதிக்கிறான். அவனுக்கு பிரச்னைகள் வர கோர்ட்டை நாட என்ன நடக்கிறது என்பது கதை. தென்பாதியான் இயக்கியுள்ளார். இந்த படத்துக்காக கடும் உடற்பயிற்சி செய்து தடகள வீரராகவே மாறியிருக்கிறார் கே.ஜே.ஆர். இவர் படம் தயாரித்த பலரும் இப்போது இவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !