உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு

நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு


பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஒரு இசையமைப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பெயரை குறிப்பிடாமல் பேசிய ஸ்வாகதா, இசையமைப்பாளர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். பணத்தை பறித்தார். இப்போது ரிஷிகேசில் இருக்கிறேன் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு: இதற்காக நான் பல ஆண்டுகளாகக் காத்திருந்தேன். பொறுமையாகவும், அமைதியாகவும், இந்தப் பயணத்தில் என்னை நானே தேற்றிக்கொள்ள முயன்றுகொண்டும் இருந்தேன். என் இதயத்தின் ஆழத்தில் இன்று நான் தேவியையும், அவள் எனக்கு வழங்கியிருக்கும் வலிமையையும் உணர்கிறேன்.

​இன்று, அசைக்க முடியாத உறுதியுடன், இந்தப் போராட்டத்தில் நான் ஒரு வலிமையான மற்றும் தீர்க்கமான அடியை முன்னோக்கி எடுத்து வைக்கிறேன். அல்லது இதை மகிஷாசுரமர்தனம் (அரக்கனை அழித்தல்) என்று சொல்லலாமா? ​அவளுடைய தாண்டவம் ஆக்ரோஷமானதாகவும், கற்பனை செய்ய முடியாத அளவிற்குப் பிரம்மாண்டமானதாகவும் இருக்கப் போகிறது! நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !