உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளா : முதல் நாள் வசூலில் இரண்டாம் இடம் பிடித்த 'த்ரிஷ்யம் 3'

கேரளா : முதல் நாள் வசூலில் இரண்டாம் இடம் பிடித்த 'த்ரிஷ்யம் 3'

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த மலையாளப் படமான 'த்ரிஷ்யம் 3' நேற்று உலகம் முழுவதும் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கான முன்பதிவு சிறப்பாகவே இருந்தது.

கேரளாவில் நேற்றைய முதல் நாள் வசூலில் சுமார் 11 கோடியை இப்படம் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையாளப் படங்களின் முதல் நாள் வசூலில் இது இரண்டாவது இடம். முதலிடத்தில் 14 கோடியுடன் மோகன்லால் நடித்து வெளிவந்த 'எம்புரான்' படம் அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. அதே சமயம் ஒரே ஒரு ஆன்லைன் இணையதளத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 5.87 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை மட்டும் வெளியிட்டுள்ளது.

இது மலையாள சினிமாவில் இதுவரையில் எந்த ஒரு படத்திற்கும் கிடைக்காத முன்பதிவு எனக் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !