உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'முறைமாமன்'-ஐ ரீமேக் பண்ண ஆசை: சுந்தர்.சி, குஷ்பு மகள் அனந்திதா

'முறைமாமன்'-ஐ ரீமேக் பண்ண ஆசை: சுந்தர்.சி, குஷ்பு மகள் அனந்திதா


அவ்னி மூவிஸ் சார்பில் உருவாகும் டபுள் ஆக்குபன்சி படத்தை அஸ்வின் கந்தசாமி இயக்க, சந்தோஷ், ரேஷ்மா, சம்யுக்தா நடிக்கிறார்கள். குஷ்புவின் குடும்ப நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக குஷ்புவின் இளைய மகள் அனந்திதா பணியாற்றியுள்ளார். அவரின் பள்ளி தோழன்தான் ஹீரோ சந்தோஷ்.

சென்னையில் நடந்த விழாவில் அனந்திதா பேசுகையில் ''அப்பா, அம்மா ஏகப்பட்ட ஹிட் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் நடித்த படங்களில் முறைமாமனை நான் ரீமேக் செய்ய ஆசைப்படுகிறேன். அந்த படத்தின் மூலம்தான் அப்பாவும், அம்மாவும் முதலில் இணைந்தவர். அதேபோல், அப்பா நடித்த படங்களில் உள்ளத்தை அள்ளித்தா பிடிக்கும். ஆனால், அந்த மாதிரி படத்தை ரீமேக் செய்ய முடியாது. இப்போது அக்கா அவந்திகா சினிமாவில் நடித்து வருகிறார். ஆனாலும், அவர் குஷ்பு ஆக முடியாது. சினிமாவில் ஒரே ஒரு குஷ்புதான்'' என்றார்.

குஷ்பு பேசுகையில், ''மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அனந்திதா வொர்க் பண்ணினார். ஆனால், திரையில் அவர் பெயர் வரவில்லை. அது அவர் செய்த தவறுதான். பின்னர் லண்டனுக்கு படிக்க சென்றார். இப்போது சினிமாவில் வந்து இருக்கிறார். சின்ன வயதில் இருந்தே ஹீரோ சந்தோசை தெரியும். அவர் என் மகன் மாதிரி. இன்றைக்கும் குழந்தைகள் பெரிய ஆளாகிவிட்டாலும் காலையில் எங்கே இருந்தாலும் எனக்கு அம்மா என போன் செய்து உதவிகள் கேட்பார்கள்.

ஏன், இப்பவும் வெளியூரில் இருந்தால் சுந்தர்சியை நான்தான் எழுப்பிவிடுகிறேன். நான் மகள்களுக்கு அட்வைஸ் செய்வ இல்லை. நான் இப்போது தமிழில் படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கில் சில படங்களில் நடிக்கிறேன். என் மகள் அனந்திதா காதல் திருமணம் செய்வாரா என தெரியவில்லை. முதலில் அவர் உயரத்துக்கு மாப்பிள்ளை கிடைக்கவேண்டும். இந்த படம் தவிர, 'மீசையை முறுக்கு 2' படத்தையும் அவர் முடித்துவிட்டார். பெரிய மகள் தமிழில் 2 படங்களில் நடிக்கப்போகிறார். நான் செக்கில் கையெழுத்து போட்டுக்கொண்டே பிஸியாக இருக்கிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !