உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 7 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பியுள்ள ஆன் ஷீத்தல்

7 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பியுள்ள ஆன் ஷீத்தல்


மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஆன் ஷீத்தல் 'காளிதாஸ்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் அவர் பரத் மனைவியாக நடித்திருந்தார். அதன்பிறகு ஆர்.ஜே.பாலாஜி நடித்த 'சிங்கப்பூர் சலூன்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் விரைவில் வெளிவர இருக்கும் 'பாதாம்கீர்' என்ற படத்தின் மூலம் நாயகியாக திரும்பி வருகிறார்.

இதில் அவர் சிவகுமார் என்ற புதுமுகத்திற்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்ளுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப், பிரதீப் ஜோஷ், யோகிபாபு, மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன் மற்றும் லிஜா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது, அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்குகிறார். ரொமாண்டிக் காதல் மற்றும் காமெடி படமாக உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !