உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா

முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா


கவர்ச்சி நடிகை சோனா, தற்போது தன் வாழ்க்கை வரலாறு கதையை 'ஸ்மோக்' என்ற பெயரில் எடுத்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய 'ஸ்மோக்' வெப்சீரிஸ் படக் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கை மேனேஜர் ஒருவர் எடுத்து வைத்துக்கொண்டு தர மறுக்கிறார், அவரிடமிருந்து டிஸ்க்கை வாங்கித் தரவேண்டும் என திடீரென பெப்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு பரபரப்பை கிளப்பினார்.

சில நாட்களுக்கு முன்னதாக ஹார்ட் டிஸ்கை மீட்ட அவர், 'ஸ்மோக்' வெப் தொடரை ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சோனா, இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னிடம் வேலை பார்த்து வந்ததாகவும், என்னை மறந்துவிட்டான் என்ற ஆதங்கம் இருக்கிறது எனப் பேசினார். விக்னேஷ் சிவன் பற்றி சோனாவின் இந்த தகவல் வைரலாக பரவியது.

இந்த நிலையில் இவை அனைத்தையும் பற்றி சோனாவிடம் நாம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: இன்னும் சில நாட்களில் 'ஸ்மோக்' படம் ரிலீஸ் ஆகிறது. 45 நாட்களுக்குள் ரிலீஸ் ஆகிவிடும். ஆனால் இப்போதும் அதுப்பற்றியெல்லாம் சொல்லவில்லை என்றால், படத்தை வெளியிட விடாமல் தடுத்திருப்பார்கள். அதனை நான் ஓபனாக பேசிவிட்டால், படத்தை தடுத்தாலும் இதற்காகதான் என தெரிந்துவிடும் தானே. படத்தின் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை எடுத்துக்கொண்டு காணாமல் போகினர். அது தற்போது கிடைத்துவிட்டது. அப்படத்தில் சொல்லியிருப்பது எல்லாமே உண்மைதான். ஆனால், நீங்கள் நினைப்பதுபோன்ற எதுவும் இருக்காது. ஆனால், அவர்கள் எல்லாம் இது இருக்குமோ, நம்மை பற்றி இருக்குமோ என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். குற்றம் உள்ள நெஞ்சே குறுகுறுக்கும்.

விக்னேஷ் சிவன் பற்றி நான் பேசியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. அவர் என் அலுவலகத்தில் தான் 3 ஆண்டுகள் பணியாற்றினார். நிறைய வொர்க் போய் கொண்டிருந்தது. அப்போது திடீரென நயன்தாராவை சந்தித்து 'நானும் ரவுடிதான்' படத்தை ஆரம்பித்தார். அதன்பின்னர் அப்படியே போயிட்டார். மறந்திருக்க வேண்டாம், நல்ல மனிதர், கடின உழைப்பாளி என்றுதான் சொல்லியிருந்தேன்.

நமக்குள் எந்த பிரச்னையும் இல்லை, எந்தவித தொடர்பும் இல்லை, நல்ல நண்பர்களாக இருந்து, சூப்பரான ஒரு டீம் என இருந்தும் விக்னேஷ் சிவன் விட்டுப்போனது வருத்தம். நல்லா இருக்கப்போகிறாய் என்றால் சந்தோஷம் தானே படப்போகிறேன். ஆனால் அப்படியே கட் பண்ணிட்டு போனது வருத்தமாக இருந்தது.

நானும் முதல்வர் விஜயை சந்திக்க விரைவில் செல்வேன். அதற்காக காத்திருக்கிறேன். ஆட்சி எப்படி இருக்கிறது என்றெல்லாம் தெரியாது, ஆனால் அதிரடியான நிறைய மாற்றம் நடக்கிறது. அது நல்லா இருக்கும் என நம்புகிறேன். அது நடந்தால் நம் ஊர் வேற லெவலாக இருக்கும். அவரை சந்தித்து எந்த கோரிக்கையும் வைக்கப்போவதில்லை. அவரை சந்தித்து வாழ்த்து சொல்வதையே பெருமையாக நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !