உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்ஸ்டாவில் அனிருத்தின் 'தீம் மியூசிக்கை' பயன்படுத்திய பிரதமர் மோடி

இன்ஸ்டாவில் அனிருத்தின் 'தீம் மியூசிக்கை' பயன்படுத்திய பிரதமர் மோடி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஏஏ 23 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அதன் தீம் மியூசிக் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையமைத்த இந்த தீம் மியூசிக் வெளியான உடனே மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தது. சமூக வலைதளத்தில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான ரீல்ஸ் வீடியோக்களில் பயன்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியா நாட்டின் உயரிய கவுரவமான 'ஆர்டர் ஆப் தி ஒயிட் டபுள் கிராஸ்' விருதை அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி வழங்கினார். இந்த போட்டோ பிரதமரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அனிருத்தின் ஏஏ 23 படத்தின் தீம் மியூசிக் ஒலிக்கவிடப்பட்டு இருப்பது மேலும் இந்த தீம் மியூசிக்கை கவனம் பெற செய்துள்ளது.

பிரதமரின் தளத்தில் இந்த இசை பயன்படுத்தப்பட்டதை கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். இந்த பதிவு விரைவாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !