'டிரெயின்' படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய விஜய் டிவி!
ADDED : 11 hours ago
வி கிரியேஷன்ஸ் எஸ். தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிரெயின்'. இதில் ஜெய்ராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் ரிலீஸூக்கு தயாராகி இரண்டு வருடத்திற்கும் மேல் ஆகிறது. ஆனாலும், இந்த படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் வியாபாரங்கள் தேங்கி நிற்பதால் இப்படம் ரிலீஸ் ஆகாமல் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில் முதற்கட்டமாக டிரெயின் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். ஆனாலும், இன்னும் டிஜிட்டல் உரிமைக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது. விரைவில் டிரெயின் படம் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.