உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'லவ் ஓ லவ்' படத்தில் பாடும் மிஷ்கின்!

'லவ் ஓ லவ்' படத்தில் பாடும் மிஷ்கின்!


நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்கு பிறகு ' லவ் ஓ லவ்' எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் . இப்படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்குகிறார் . இதில் கதாநாயகியாக நாக துர்கா என்பவர் அறிமுகமாகிறார்.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளிவந்த டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் 'காலம் மாறிப்போச்சு' படத்தில் வடிவேலு குரலில் இடம்பெற்ற 'வாடி பொட்டபுள்ள' பாடலை ரீமிக்ஸ் செய்கின்றனர். இந்த ரீமிக்ஸ் பாடலை இயக்குனர் மிஷ்கின் பாடியுள்ளார் என்பது தான் ஆச்சரியமான தகவல். ஏற்கனவே மிஷ்கின் 'கண்ணதாசன் காரைக்குடி, நாட்டுல நம்ம வீட்டில' ஆகிய பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !