உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யஷ் நடித்த 'டாக்சிக்' ஆகஸ்ட் 26ல் ரிலீஸ்

யஷ் நடித்த 'டாக்சிக்' ஆகஸ்ட் 26ல் ரிலீஸ்


'கேஜிஎப், கேஜிஎப்2' படங்களுக்குபின் யஷ் நடித்த படம் 'டாக்சிக்'. இதை கீது மோகன்தாஸ் இயக்கி இருக்கிறார். ஜூன் 4ம் தேதி பான் இந்தியா படமாக 'டாக்சிக்' வருவதாக இருந்தது. ஆனால், வளைகுடா பதட்டம், ஈரான், அமெரிக்கா போர் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் தியேட்டர் கிடைக்காத நிலை, பிஸினஸ் உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனதாகவும் தகவல்.

இந்நிலையில், டாக்சிக் படம் ஆகஸ்ட் 26ம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படம் கன்னடம், மலையாளத்தில் தயாராகி இருந்தாலும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. பக்கா ஆக் ஷன் கதை களத்தில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணிவசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.

1970 கால கட்டத்தில் கோவாவில் நடக்கும் ஒரு கடத்தல், தாதா சாம்ராஜ்யம் பற்றி கதை என்று கூறப்படுகிறது. யஷ் நடித்த கேஜிஎப் முதல்பாகம் 250 கோடியும், கேஜிஎப் 2 ஒட்டு மொத்தமாக ஆயிரத்து 250 கோடியும் வசூலை அள்ளியிருப்பதால் டாக்சிக் படத்துக்கு இந்தியளவில் பெரிய வரவேற்பு உள்ளது. தமிழில் மாதவன் நடித்த நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர், இந்த படத்தை இயக்கிய கீது மோகன்தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !