கார்த்தி, 'டாடா' இயக்குனர் புதிய கூட்டணி?
ADDED : 10 hours ago
'டாடா' படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் கணேஷ் கே பாபு. இவரின் அடுத்த படமாக ரவி மோகனை வைத்து 'கராத்தே பாபு' படத்தை உருவாக்கியுள்ளார். முதல் படத்திற்கு பிறகு இரண்டாம் படத்திற்கு நிறைய நேரங்களை எடுத்து கொண்டார் கணேஷ் கே பாபு.
அதேபோல் அடுத்த படத்திற்கு காலதாமதம் ஏற்பட கூடாது என்பதற்காக தற்போது தனது அடுத்த படத்திற்கான முயற்சியில் உள்ளார் கணேஷ் கே பாபு. முதற்கட்டமாக நடிகர் கார்த்தியை சந்தித்து கணேஷ் கே பாபு ஒரு கதையை கூறியுள்ளார். அது அடுத்த கட்டத்திற்கு நகருமா என்பது வரும் காலங்களில் தெரியும் என தகவல் வெளியாகியுள்ளது.