சத்ரபதி சிவாஜியாக நடிக்கும் ரிஷப் ஷெட்டி
ADDED : 7 hours ago
மராட்டிய பேரரசை நிறுவி, இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சிவாஜியின் வாழ்க்கை ஏற்கெனவே ஏராளமான திரைப்படங்களாக வந்துள்ளது. இந்த நிலையில் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை கதை 'சத்ரபதி சிவாஜி மகஹாராஜ்' என்ற பெயரில் மீண்டும் உருவாகிறது. இதில் காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி சிவாஜியாக நடிக்கிறார்.
சந்தீப் சிங் இயக்குகிறார். இப்படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் 2 பாகமாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் பாகம் 2027ம் ஆண்டும், 2ம் பாகம் 2029ம் ஆண்டு வெளியாக உள்ளதாம்.
தற்போது 'ஜெய் ஹனுமன்' படத்தில் நடித்து வரும் ரிஷப் ஷெட்டி, அந்தப் படத்தின் பணிகளை முடித்த பிறகு இந்த வரலாற்றுப் படத்தின் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார். பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே சத்ரபதி சிவாஜியின் மனைவியான ராணி சாய் போஸ்லேவாக நடிக்க இருக்கிறார்.