உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஸ்பிரிட்' பட டைட்டிலால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பம் ; பிரபாஸிடம் கோரிக்கை!

'ஸ்பிரிட்' பட டைட்டிலால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பம் ; பிரபாஸிடம் கோரிக்கை!


தெலுங்கில் 'தி ராஜா சாப்' படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் தற்போது 'ஸ்பிரிட், பவுஸி' மற்றும் 'கல்கி பார்ட் 2' ஆகிய படங்களில் பிசியாக இருக்கிறார். இதில் 'ஸ்பிரிட்' படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். இந்த நிலையில், தெலுங்கில் சிறிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ள 'ஸ்பிரிட் இஸ் நாட் ஒன்' (Spirit Is Not One) என்கிற திரைப்படத்திற்கு அந்தப் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என, பிரபாஸ் நடிக்கும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சட்டரீதியான நோட்டீஸை அனுப்பியுள்ளது. விவசாயப் பின்னணியில் இருந்து வந்த நர்சம்மா என்பவர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த புதிய சிக்கலால் தயாரிப்பாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

படம் ரிலீசுக்குத் தயாராகி வந்த இந்த நேரத்தில், இந்த சட்டரீதியான நோட்டீஸால் தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள நர்சம்மா, நாங்கள் ஒரு சிறிய விவசாயக் குடும்பம்; பல கஷ்டங்களுக்கு இடையே சொத்துக்களை விற்று இந்தப் படத்தை எடுத்துள்ளோம். எங்களைச் சரிவர விசாரிக்காமல் இப்படிச் சட்ட நோட்டீஸ் அனுப்பியது வருத்தம் அளிக்கிறது. பெரிய பட நிறுவனங்கள் எங்களைப் போன்ற சிறியவர்களைச் நசுக்குகின்றன என்று கூறியுள்ளார். மேலும், பிரபாஸை நேரில் சந்தித்துத் தங்களது பட ரிலீஸ் விஷயத்தில் உதவி செய்யுமாறு வேண்டுகோள் வைத்துள்ளார். ஒருவேளை தீர்வு கிடைக்காவிட்டால், சட்டரீதியாகப் போராடவும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !