உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரித்விராஜிற்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால்.

பிரித்விராஜிற்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால்.

மலையாள திரை உலகில் நடிகர் பிரித்விராஜுக்கும், மோகன்லாலுக்கும் இருக்கும் பாசப்பிணைப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். பிரித்விராஜ் இயக்குனராக முதல் அடியை எடுத்து வைத்தபோது மோகன்லாலை கதாநாயகனாக வைத்து தான் லூசிபர் என்கிற படத்தை இயக்கினார். அடுத்தடுத்து மோகன்லாலை வைத்து மூன்று படங்களை இயக்கிவிட்டார். தற்போது கலீபா என்கிற படத்தில் பிரித்விராஜ் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாம்பாரக்கல் அகமது அலி என்கிற ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், இந்த கதாபாத்திரத்தில் பிரித்விராஜின் தாத்தாவாக மோகன்லால் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிக்க மோகன்லாலை பிரித்விராஜ் அழைத்தபோது அவரிடம், நீங்கள் இதற்கு முன்பு எனது தந்தையாக நடித்திருக்கிறீர்கள், இப்போது எனது தாத்தாவாக நடித்தால் எப்படி இருக்கும்? என்று கேட்டுள்ளார். அதற்கு மோகன்லாலும் அன்புடன் சம்மதம் தெரிவித்து விட்டாராம். இதற்கு முன்பு ப்ரோ டாடி படத்தில் பிரித்விராஜின் தந்தையாக மோகன்லால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !