உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மதுரையில் 'நுாறுசாமி' படத்தின் வெற்றி விழா ஏன்?

மதுரையில் 'நுாறுசாமி' படத்தின் வெற்றி விழா ஏன்?


சசி இயக்கத்தில் விஜய்ஆண்டனி, ஸ்வாசிகா நடித்த 'நுாறுசாமி' படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்தது. இந்த படம் கள்ளக்குறிச்சி மாவட்ட பின்னணியில் நடக்கும் கதை அங்கே விழா நடக்கவில்லை. வழக்கம்போல் சென்னையில் நடக்கவில்லை. என்ன காரணம் என்று விசாரித்தால் 'அயோத்தி' மந்திரமூர்த்தி இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். அது அவரின் சொந்த படமும் கூட.

மதுரையில் படப்பிடிப்பு நடப்பதால் அங்கேயே நுாறுசாமி படத்தின் விழாவை வைக்கலாம் என சொல்ல, இயக்குனர் சசி உள்ளிட்டோரும் மதுரை சென்று வெற்றி விழாவை கொண்டாடி இருக்கிறார்கள். விமர்சன ரீதியாக படம் ஹிட். வசூல் ரீதியாக தப்பித்துவிட்டதா என பலருக்கும் தெரியவில்லை. படம் ரிலீசுக்கு முதல்நாள் கூட விஜய்ஆண்டனியின் முந்தைய பட பிரச்னைகள் காரணமாக 6 கோடி பணம் கட்ட வேண்டிய பிரச்னை ஏற்பட்டது. அதை தயாரிப்பாளர் தனஞ்செயன், திருப்பூர் சுப்ரமணியன் உட்பட பலர் பேசித் தீர்த்தனர்.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' தெலுங்கில் பெரிய ஹிட். ஆனால், நுாறுசாமி அப்படி சாதனை படைக்கவில்லை. ஆனாலும், நுாறுசாமி படத்துக்கு பல விருதுகள் கிடைக்கும். கண்டிப்பாக ஸ்வாசிகா தேசிய விருது உள்ளிட்ட ஏகப்பட்ட விருதுகளை அள்ள வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !