உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரதிராஜா, பாக்யராஜ் மறைவு: அஜித் அஞ்சலி செலுத்தாதது ஏன்?

பாரதிராஜா, பாக்யராஜ் மறைவு: அஜித் அஞ்சலி செலுத்தாதது ஏன்?


இயக்குனர் பாரதிரா, கே.பாக்யராஜ் மற்றும் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன் என அடுத்தடுத்து பலரை இழந்து வருகிறது தமிழ் சினிமா. இவர்களுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். வர முடியாதவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மற்ற மாநில கலைஞர்கள் கூட சென்னை வந்தனர். ஆனால், இந்த அஞ்சலி நிகழ்ச்சிகளில் நடிகர் அஜித்குமார் கலந்துகொள்ளவில்லை. இதுவரை ஒரு அறிக்கை கூட விடவில்லை. இது சமூக வலைதளங்களில் சர்ச்சை ஆகியுள்ளது.

பொதுவாக திரைக்கலைஞர்கள் நல்லது, கெட்டதுகளில் அஜித் கலந்துகொள்வது இல்லை. தனது மானேஜரின் உதவியாளராக இருந்த ரேகா என்பவர் திருமணத்தில் கலந்துகொண்டார். அடுத்து ஆச்சி மனோரமா இறுதி சடங்குகளில் கலந்துகொண்டார். மற்றபடி இது போன்ற நிகழ்வுகளை தவிர்த்துவிடுவார்.

அவர் பாரதிராஜா, பாக்யராஜ் படங்களில் நடித்தது இல்லை. நெருங்கிய பழக்கமும் இல்லை. அதனால், அவர் வரவில்லை. இப்போது கார் ரேஸ் வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். ஓரளவு தெரிந்தவர்கள் என்றால் போனில் பேசிவிடுகிறார். அது விளம்பரப்படுத்துவது இல்லை. அது அஜித் பாலிசி. அதேபோல், பாக்யராஜ் படங்களில் நடித்த சுலக்ஷனா, ஐஸ்வர்யா, உட்பட பலரும் இறுதி சடங்கில் சூழ்நிலை காரணமாக கலந்து கொள்ளவில்லையாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !